Sunday, December 6, 2009

சிம்புகிட்ட நயன் ஜம்பா?


எம் தாய் நாடு(இந்தியா) மற்றும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து , யூஎஸ் மற்றும் பல உலக நாடுகளிருந்து எம்முடைய முந்தய பதிவுக்கு வருகை தந்த லட்சோப லட்சம் அன்பர்களுக்கு(வருவாங்கன்னு எதிர்பார்த்தேன் ) என் மனமார்ந்த நன்றிகள். சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கிற ஒன்று என் முதல் பதிவும் அப்படித்தான் . பதிவு போட வேண்டும் என்ற ஆசையில் ப்ளாக் கிரியேட் செய்து ஒரு வருடம் (கிட்டத்தட்ட) ஆகிறது. ஆனால் ஆண்டவன் இன்னைக்குதான் அருள் புரிஞ்சார். பல சக நகைச்சுவை பதிவர்களின் பதிவுகள் மனதுக்கு சுவையாகவும் கண்ணுக்கு அழகான நகையாகவும் மொத்தத்தில் ஒரு விருந்தாகவும் என்னைப்போன்ற புதியவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஒன்றாகவும் இருந்து வருகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
ஒக்கே . விஷயத்துக்கு வருவோமா? சன் டிவில சீனா கும்மி சான் கும்மி சாச்சாகும்மின்னு (ஃபெப்சி விழா) நம்ம நடிக நடிகையர் கும்மி அடிச்சிட்டு இருந்தப்போ காது டிவிக்கும் கண் கம்ப்யுடருக்கும் கொடுத்து டைப்பிக்கொண்டிருக்கிறேன். நம்ம ஜவுளி அமைச்சரின் சகோதரர் தமிழ் மக்களின் நெஞ்சங்களை பனியன் பாடிகளை தாண்டியும் பிராண்டுவதென்ற உயரிய நோக்கத்தோடு காட்டிய படம்தான் இந்த நிகழ்ச்சின்னு நெனைக்கிறேன். இதுல டிஆர்பி ரேட்டிங்க கூட்டி காட்ட சிம்பு பாடிய லூசு பெண்ணே பாடலையும் அதற்கு நயன் ரியாக்க்ஷனும் (உபயம் எடிட்டிங் )மாற்றி மாற்றி காட்டி நயன் என்னமோ சிம்புட்ட ஜம்ப் ஆகிற மாதிரியே சீன் போட்டார்கள். புரோட்டா வாங்கி கொடுத்து போனசா சிக்கனும் கொடுத்து புரணி கேக்கற நம்ம மக்கள்தான் பாவம். (அரசு டிவில ஏமாத்த மாட்டாங்கன்னு நெனைக்கறாங்க போல)
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்குதே நெஞ்சம்னு பாடிட்டாங்க அப்பவே. அதனாலே, கடன் அன்பை முறிக்கும், சில சமயம் எலும்பையும் முறிக்கும்( ரௌடிகிட்ட வாங்குனா) எல்லாரும் வாங்குன கடன ஒழுங்கா திருப்பி கொடுத்துடுங்க இல்லன்னா சிக்கல்தான் (அரசியல்ல இருந்தா தள்ளுபடி கிடைக்கும் ).
கடன்னா பணம் மட்டும் இல்லங்க ... இன்னும் சில விஷயம் இருக்குது . திருப்பி காட்டாத அன்பு கூட கடன்தான் ..! நம்ப முதல்ல காலை கடன பத்தின சில சுவராஸ்யமான(?) சம்பவங்கள பாப்போம் .
1995 ம் வருடம்னு நெனைக்கிறேன் .. நாங்க நண்பர்கள் நாலு பேர் ஏற்காடு கார்ல போனோம். எங்களுக்கு சாரதியா வந்தவர் 50 வயசு உள்ள ஒரு நண்பர் & பெரியவர் . டை கட்ன ஹோட்டல் அதிகாரிங்க 4 பேருக்கு 2 ரூம் போட்டு ஆகணும்னு சொன்னதால போட்டோம். காலைல 7 மணி அளவுக்கு எங்க சாரதி, "சார் 2 ரூம்லயும் கக்கூஸ் வேற மாதிரி இருக்கு எனக்கு பழக்கமில்ல , நம்ம கக்கூஸ் எங்க சார் இருக்குன்னு" கேட்டார். "அட, என்ன பெரிசு இதுல இப்படித்தான் வெளிஏத்தனும்னு டெமோ காமிச்சு உள்ள அனுப்பினோம். கொஞ்ச நேரம் கழிச்சு கட முடன்னு ஒரே சத்தம். சாரதி நண்பர் வேட்டிய முண்டாசு கட்டி, பட்டாபட்டிய கைல வச்சிக்கிட்டு சார் உடஞ்சிடுச்சு.... பன்ல கிழிச்சு ரத்தம் வருது சார்னாரு....
என்னமோ ஏதோன்னு நெனைச்சி உள்ள போய் பாத்தா வெஸ்டன் டாய்லட் ஐயப்பன் கோவில் தேங்காயா உடஞ்சி கிடக்கு....???!!!
என்ன ஆச்சின்னு விசாரிச்சா, " சார் எனக்கு உட்கார்ந்து போக வரலே, அதனாலே, வழக்கம் போல மேல ஏறி ட்ரை பண்ணேன் அதான் இப்படி ஆய்டுச்சு " என அப்பாவியா சொன்னார். அப்புறம் அவருக்கு ஃபஸ்ட் எய்ட் பண்ணி, ஹோட்டலுக்கு பணம் கட்டிட்டு வந்தோம்.
இன்னொரு சம்பவம், சென்னைக்கு சில முதல் வருகை நண்பர்களோடு வந்த போது ட்ரிப்லிகேன்ல உள்ள லாட்ஜ்லே தங்குனோம். அதுல ஒரு நண்பர், போட்ட பேன்ட் , ஷர்ட்டோட வந்துட்டார். மறுநாள் போட பேன்ட் , ஷர்ட் வேணும்கற ஆவல்ல, துணி துவைக்க போய்ட்டார். என்ன சார் வாஷ் பண்ணிஆச்சான்னு கேட்டப்போ, " ஊற வச்சிருக்கேன்ன்னு " கூலா சொன்னார். பத்துநிமிஷம் கழிச்சு, இன்னொரு நண்பர் அலறிகிட்டே ஓடி வந்தார். என்னன்னு விசாரிச்சா நம்பாளு பேன்ட், ஷர்ட வெஸ்டர்ன் டாய்லேட்ல உள்ள தண்ணில ஊற வச்சிருக்காரு...!!!!????
இந்த விஷயம்லாம் பார்த்து/கேக்குற போது, நளதமயந்தி படத்துல மிஸ்டர் .மாதவன் ஏரோப்லன்ல டிஸ்ஸு பேப்பர் அனுமார் வால் போல நீட்ட வந்த காட்சி ஞாபகம் வந்தது. சில சினிமாக்களில் உண்மை காட்சிகளும் இடம் பிடிக்கறது என்ற எண்ணமும் உரைத்தது.
காலைகடன்னு சொன்னாலும் கடனேன்னு போறதவிட கரெக்டா போறது நல்லதுன்னு நெனைக்கறேன். நீங்க என்ன சொல்றீங்க?

உங்க கருத்தோட வோட்டையும் போட்டீங்கண்ணா (புள்ள குட்டிங்க நல்லாருக்கும் )